15 வயது சிறுவனால் 16 வயது சிறுமிக்கு பிறந்து இறந்த குழந்தை : அரசுப்பள்ளி கழிவறையில் நடந்த பயங்கரம்.. கடலூரில் பேரதிச்சி.!

15 வயது சிறுவனால் 16 வயது சிறுமிக்கு பிறந்து இறந்த குழந்தை : அரசுப்பள்ளி கழிவறையில் நடந்த பயங்கரம்.. கடலூரில் பேரதிச்சி.!


Cuddalore Bhuvanagiri Minor Girl Abused Delivery Baby by Minor Boy

பள்ளிப்பருவத்தில் காதலில் விழுந்த சிறுமிக்கு சிறுவனால் குழந்தை இறந்து பிறக்க, அரசுப்பள்ளி கழிவறை முட்புதரில் வீசப்பட்ட குழந்தையுடைய மரணத்தின் கண்ணீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக பள்ளியின் கழிவறையில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் ஆன் சிசு இருந்தது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவிகள் ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கவே, புவனகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே பள்ளியில் பயின்று வரும் 11-ம் வகுப்பு மாணவி கழிப்பறையில் பிரசவித்து குழந்தையை வீசி சென்றது தெரியவந்தது. குழந்தை குறைமாத பிரசவத்தால் உயிரிழந்ததும் அம்பலமானது. இதனையடுத்து, மாணவியிடம் ரகசிய விசாரணை நடந்தது. 

Cuddalore

அதாவது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவருடன் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனால் காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசிவந்த நிலையில், இருவரும் எல்லைமீறி நடந்துள்ளனர். 

இதனால் சிறுமி கர்ப்பமாகவே, சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கழிவறைக்கு சென்றபோது குறைமாதத்தில் குழந்தையும் இறந்து பிறந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த மாணவி குழந்தையை கழிவறைக்கு அருகே உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார். 

மாணவியின் வாக்குமூலத்தின் பேரில் 10-ம் வகுப்பு மாணவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.