#JustIN: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; அருவிகளில் குளிக்க தடை.!



Courtallam Falls District Administration Banned Visit 

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பகுதியில் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவை உள்ளன. இவற்றில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்வது இயல்பு. அருவிகளில் அதிக நீர்வரத்து ஏற்படும்போது, பாதுகாப்பு கருதி மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படும்.

17 வயது சிறுவன் மரணம்

சமீபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் பழைய குற்றாலத்திற்கு நீராட சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மெயின் மற்றும் ஐந்தருவிகளில் மக்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். 

இதையும் படிங்க: "சிறுமி ஒருவருக்கு ரூ.30 ஆயிரம்" - மகளின் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்; சென்னையில் பகீர்.!!

Courtallam Falls

நொடியில் நடந்த சோகம்

அங்கு பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட்டு இருந்ததால், அனைவரும் நீர் வரத்து லேசாக அதிகரிக்கும்போதே உடனடியாக அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், பழைய அருவியில் அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் அனைத்தும் நொடியில் நடந்து முடிந்துவிட்டது. 

மீண்டும் தடை விதிப்பு 

இதனையடுத்து, அங்கு வெள்ளம் குறையும் வரை தற்காலிகமாக குளிக்க தடை விதிக்கப்பட்டு, பின் மீண்டும் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, தென்மாவட்டங்களுக்கு தற்போது அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!