#Breaking: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 



Chennai RMC announce 10 Southern Districts Rain 

 

தமிழ்நாட்டில் கோடை மழைக்கான தீவிரம் குறைந்துவிட்ட நிலையில், வரும் நாட்களில் மிகவும் மழையின் தன்மை குறையும். அதேபோல, தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர், தமிழ்நாட்டுக்கு மழையை மீண்டும் எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: இரவு 7 மணிவரை இந்த 21 மாவட்டங்களில் கூரையை பிய்த்துகொட்டப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

heavy rain

வரும் நாட்களில் வானிலை நிலவரம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஏற்கனவே மே 26ம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு குறைவு எனினும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகாகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் இயல்பு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி அளவு உயரும் எனவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் கனமழை; பேருந்து ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவுரை.!