"சிறுமி ஒருவருக்கு ரூ.30 ஆயிரம்" - மகளின் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்; சென்னையில் பகீர்.!!Chennai Valasaravakkam Prostitution Case Update 

 

சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் அறிந்த காவல் துறையினர், அங்கு சோதனை நடத்தி 17 வயது சிறுமியை மீட்டனர். மேலும், அவருடன் உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், பெண் தரகர் நதியா (37) கைது செய்யப்பட்டார். 

போக்ஸோவில் கைது

அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதிர்ச்சிதரும் பல தகவல்கள் அம்பலமானது. அதாவது, நதியாவுக்கு 12ம் வகுப்பு பயின்று வரும் 18 வயதுடைய மகள் இருக்கிறார்.

இதையும் படிங்க: மகளின் கள்ளகாதலால் வெறிச்செயல்; தலையை துண்டித்து படுகொலை செய்த தந்தை.. நெல்லையில் பயங்கரம்.!

ஏழ்மையான பெண்கள் டார்கெட்

இவரின் மூலமாக, நதியாவின் மகள் படிக்கும் வகுப்பில் இருக்கும் சக மாணவிகளில் ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவிகளை வீட்டிற்கு அழைத்துவந்து பேசி, அவர்களை மூளைச்சலவை செய்து விபச்சாரத்திற்கு அனுப்பி இருக்கிறார். இதில் அழகான பெண்களை மட்டும் அவர் தேர்வு செய்து அனுப்புவாராம். 

சிறுமிக்கு விலை நிர்ணயம்

சிறுமிகளை உள்ளூர் புரோக்கர்கள் உதவியுடன் விடுதிகள் உட்பட பிற இடங்களுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்த தலா ஒரு சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலையும் பேசப்பட்டு பாலியல் தொழில் நடந்துள்ளது. விசாரணை தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: 17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது கிழவன்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!