தமிழகத்தையே அதிரவைத்த 6 வயது சிறுமியின் பலாத்கார கொலை வழக்கு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தையே அதிரவைத்த 6 வயது சிறுமியின் பலாத்கார கொலை வழக்கு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


court punishment to persion for sexually abused 6 year child

கடந்த மார்ச் 25 ஆம் தேதி கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து போலீசார் பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் பின்புறத்தில் மறுநாள் காலை சிறுமி துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்,  சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மூச்சு திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியின் வீட்டிற்கு எதிரே  மனைவியை  பிரிந்து வாழ்ந்துவந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

6 year child

இந்த வழக்கு கோவை மகளிர்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு போக்கோவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி வாதம் நடைபெற்றது. இந்நிலையில் இதன் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து குற்றவாளி சந்தோஷ்குமார் தான் என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் சிறுமியின் உடலில் மற்றொரு நபரின் விந்துவானது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த நபரையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டுமென சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.