தமிழகம் Covid-19

மீண்டும் களமிறங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்.! இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி.!

Summary:

Corono tamilnadu current positive count update

தமிழகத்தில் இன்று (15-04-2020) ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்  அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமீபகாலமாக கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே 21 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த எண்னிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 112 பேர் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழக தலைமை செயலர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் கொரோனா சம்மந்தமான அறிவிப்புகளை செய்தியாளர்களிடம் கூறிவந்த நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து நிலவரத்தை கூறியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.


Advertisement