சென்னையில் இன்று ஒரே நாளில் 43 பேர்.! தமிழகத்தில் இன்றுமட்டும் 66 பேர்.! மொத்த எண்ணிக்கை 1821 ஆக உயர்வு.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 43 பேர்.! தமிழகத்தில் இன்றுமட்டும் 66 பேர்.! மொத்த எண்ணிக்கை 1821 ஆக உயர்வு.!


corono-tamilnadu-count-latest-update

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கொரோனவை தடுக்கவும் மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

corono

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு சற்று குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழத்தில் இதுவரை 1821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.