தமிழகம் Covid-19 Corono+

தமிழகத்தில் கொரோனா இல்லாத இரண்டே மாவட்டங்கள்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

Summary:

Corono not affected districts list in tamil nadu

தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில் இதுவரை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் மட்டும் கொரோனா பாதிக்காத மாவட்டங்களாக உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக குறைந்துவந்த பாதிப்பு நேற்று திடீரென மேலும் 105 பேருக்கு உறுதியானது. இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனான பாதித்தவர்கள் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கொரோனா பாதிப்பு ஒன்றுகூட இல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டும் தற்போதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக உள்ளன.


Advertisement