கொரோனோவால் மேலும் ஒரு பெண் பலி! தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

கொரோனோவால் மேலும் ஒரு பெண் பலி! தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!


corono-affected-dead-in-tamilnadu

சீனாவில், தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் 8453 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.மேலும் 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த கொடிய கொரோனா நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

dead

இந்நிலையில் தமிழகத்தில் 969 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் நேற்று மட்டும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் இதுவரை கொரோனோவால் 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில்  சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயது நிறைந்த பெண் கொரோனா பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.