இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி சென்னை வந்தது!



corona vaccine came to chennai

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டு பிடிக்காத சூழ்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து இருக்கிறது. அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்து டெல்லியில் உள்ள ‘ஷீரம் இன்ஸ்டியூட்’ மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்து இருக்கிறது. இதில் தற்போது முதல்கட்டமாக 300 ஊசி மருந்துகள் நேற்று சென்னை வந்துள்ளன.

corona

இதனையடுத்து வரும் 10ஆம் தேதி முதல் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை தொடங்கப்படும் எனவும், சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமசந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தடுப்பூசி பரிசோதனை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.