கண்கலங்கவைக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை..! இன்றைய மொத்த பாதிப்பு மற்றும் இறப்பு விவரம் இதோ.!

கண்கலங்கவைக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை..! இன்றைய மொத்த பாதிப்பு மற்றும் இறப்பு விவரம் இதோ.!


Corona todays tamilnadu count update

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,150  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது. 

corona

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா நோய் தொற்றினால் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக 6,008 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3,68,141 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் 52,578 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.