மகிழ்ச்சித்தரும் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை..! இதுவரை தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

மகிழ்ச்சித்தரும் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை..! இதுவரை தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?


Corona tamil nadu current update and discharge cases count

தமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 119 பேர் கொரோனாவால் மரணமடைந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா  வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 5,994 பேரை சேர்த்து தமிழகத்தில் இதுவரை 2,96,901 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

இன்று மட்டும் 119 பேர் உயிரிழந்தநிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது. ஒருபுறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் சற்று ஆறுதலாக கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 6,020 பேர் கொரோனாவிலிருந்து குணம்மடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தத்தில் 2,38,638 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்றைய தேதியில் 52,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.