தமிழகம் Covid-19

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவா..? தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்..

Summary:

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செய

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த பாதிப்பு தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் சில மாநிலங்களில் ஊரடங்கு முறை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நாள்தோறும் 300 கும் குறைவாக இருந்துவந்த பாதிப்பு தற்போது நாள்தோறும் 2000 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையியல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றார்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மீட்டும் ஊரடங்கை அமல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என கூறிய அவர், ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மட்டும் படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Advertisement