தமிழகம் Covid-19

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கியது.! சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்.!

Summary:

ஆரம்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்க

ஆரம்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக அதிவேகத்தில் பரவும் கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை உருவாகியுள்ளது என்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Advertisement