அரசியல் தமிழகம் Covid-19

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளருக்கு கொரோனா பாதிப்பு.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல்

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது தமிழகத்திலும்,மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. சமீப காலமாக  பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தநிலையில், திமுக வேட்பாளர் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுகிறார். இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த  திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பிரச்சாரத்தை நிறுத்தி உள்ளார். 


Advertisement