தமிழகம் Covid-19 Corono+

தமிழகத்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Summary:

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று புதிதாக 3,086 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று புதிதாக 3,086 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட பாதிப்பு நிலவரம் மற்றும் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் இன்று வெளியான அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 3,086 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 845 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,97,116 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று 39 பேர் (அரசு மருத்துவமனை - 21, தனியார் மருத்துவமனை - 18) உயிரிழந்துள்ளனனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் மட்டும் 4,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,50,856 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 35,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement