தமிழகம் Covid-19

தெரியுமா?? புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!! எவற்றிக்கெல்லாம் கட்டுப்பாடு?? முழு விவரம் இதோ!!

Summary:

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விதித்திருந்த புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறைக்குவ

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விதித்திருந்த புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறைக்குவருகிறது.

இன்று முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அலுவலகம் வந்து பணிபுரிய அனுமதி.

பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது. ஆனால் காய்கறி, மளிகைக்கடைகள் போன்றவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்க அனுமதி.

உணவகங்கள், பேக்கரி போன்றவற்றில் அமர்ந்து சாப்பிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பார்சல் மட்டுமே பெற்றுச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

கோவில் திருவிழாக்கள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது. திரையரங்குகள், கலாசார செயல்பாடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு எதற்கும் அனுமதி கிடையாது.

டீக்கடைகள், அனைத்து இறைச்சி, மீன், கோழிக்கறி கடைகள், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் திறந்திருக்கும். அதேபோல் முன்னதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைகளும் தொடரும் எனவும், இந்த புதிய ஊரடங்கு நடவடிக்கை வரும், 20ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Advertisement