வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதியானது! பரவியது எப்படி.?

வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதியானது! பரவியது எப்படி.?


Corona increased in velachery

வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் மிக அதிகமாக கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதேபோல் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்க வந்தவர்கள் மற்றும் விற்க வந்தவர்கள் தொடர்புடையவர்களால், தமிழகத்தில் மிக அதிகமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.

corona

இந்தநிலையில், கோயம்பேட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கிவந்து வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வந்த வியாபாரிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்களை சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அந்த சோதனையில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த தள்ளுவண்டி வியாபாரியின் மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதில் 5 பேர் சிறுவர்கள் ஆவர். இதனால் வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி முழுவதும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.