சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! 74 பேர் பலி!
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! 74 பேர் பலி!

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், கொரோனா பாதிப்பால் 3,144 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 4,910 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக உள்ளது.