தமிழகம் Corono+

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Corona increased in tamilnadu

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் பரவி வந்த இந்த வைரஸ் ஆனது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, தமிழகத்தில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், வழக்கம்போல் சென்னையில் புதிய உச்சமாக 266 பேரும், புதிதாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 122 பேரும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement