வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
குட் நியூஸ்! தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 3914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3914 கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1036 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6,87,400 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,642 ஆக அதிகரித்துள்ளது. இன்று சற்று ஆறுதலாக 4,929 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,37,637 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்துவந்தநிலையில் சமீபகாலமாக பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைந்து இருந்தது. இன்று நான்கு ஆயிரத்தில் இருந்து குறைந்து மூன்று ஆயிரத்துக்குள் வந்துள்ளதால் மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.