உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸ்! தமிழகத்திற்குள் இந்த வைரஸை விடாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது!

உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸ்! தமிழகத்திற்குள் இந்த வைரஸை விடாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது!Corona awareness

மத்திய அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் அறிவுறுத்தலை சரியான முறையில் பின்பற்றி வருவதாகவும், கொரானா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் அச்சமோ பதட்டமோ அடையதேவையில்லை எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவ கல்வி இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

சமீப காலமாகவே அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பாக செயல்பட்டுவருகிறார் என தமிழக மக்கள் கூறிவந்தனர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடந்த தீபவாளி அன்று குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில், அழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக இரவு பகலாக அங்கேயே இருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

corona

அதேபோல இந்நாள் வரையில் கொரானா பாதிப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என்று இந்திய சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது. இந்திய மாநிலங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, மலேசியா போன்ற நாடுகளுடன் அதிக வர்த்தகத் தொடர்புகளிலும் போக்குவரத்து தொடர்புகளிலும் தமிழகமே முதலில் இருக்கிறது. இருப்பினும், அங்கிருந்து எந்த தொற்றும் பராவமால் இருப்பதற்கு அனைத்து தமிழக விமான நிலையங்களிலும் தமிழகச் சுகாதாரதுறையின் ஒரு பெரும்படையே தீயாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே, ஏன் உலகத்திற்கே பாடம் எடுப்பது தமிழக சுகாதாரத்துறையே என கூறி தமிழக மக்கள் தமிழக சுகாதாரத்துறையை பாராட்டி வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் பயணங்களை தவிர்த்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடையே அறிவுறுத்தினார்.