இனி கூட்டுறவு வங்கிகளில் தங்க கடன் உயர்வு... ஒரு கிராமுக்கு எவ்வளவு தெரியுமா.? மகிழ்ச்சியில் மக்கள்...

ரஷ்யா - உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
மேலும் உள்நாட்டிலும் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை கூட்டுறவு வங்கியில் நேற்று முதல் ஒரு கிராம் தங்கத்தின் மீது கொடுக்கப்படும் கடன் தொகையை 3,500 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதனை பின்பற்றி மற்ற வங்கிகளும் தங்கம் மீதான கடன் தொகையை உயர்த்த இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.