1 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1 லட்ச ரூபாயை இழந்த ஜவுளிக்கடை.. நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்ச விற்பனை விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்ததால் நுகர்வோர் நீதிமன்றம் ஜவுளி கடைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனை செய்யப்படும் துணிகளுக்கு அதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விற்பனை விலையை விட ஒரு ரூபாய் அதிகம் விற்பனை செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்து அந்தக் கடையிடம் நஷ்ட ஈடு கோரினார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம் அந்தக் கடை நிர்வாகத்திடம் வாடிக்கையாளருக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக பேசியிருக்கும் வழக்கறிஞர் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் கேள்வி எழுப்புங்கள் என கோரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நுகர்வோர் தீர்ப்பாயத்தை நாடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.