தமிழகம்

பேஸ்புக் மூலம் சிறுமியை மயக்கிய கட்டடத் தொழிலாளி.! அதிர்ச்சியடைந்த பெற்றோர்.! பகீர் பின்னணி.!

Summary:

தாராபுரம் அடுத்த குண்டடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியி

தாராபுரம் அடுத்த குண்டடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 22 வயது நிரம்பிய தட்சிணாமூர்த்தி என்ற கட்டடத் தொழில் செய்யும் நபர் கடந்த 2 மாதங்களாக முகநூலில் கல்லூரி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய தட்சிணாமூர்த்தி கடந்த 31-ந்தேதி அரக்கோணத்திற்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் அரக்கோணத்தில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து அந்த மாணவியை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கல்லூரி மாணவியின் தந்தை தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அரக்கோணத்தில் இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் கல்லூரி மாணவியை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் இருந்து  சிறுமியை அழைத்துச் சென்ற தட்சிணாமூர்த்தி, மாணவிக்கு 18 வயது நிறைவாகாதநிலையில் அங்குள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தட்சிணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்தனர்.


Advertisement