ஆடலும், பாடலும் தகராறில் காத்திருந்து கதைமுடித்த கொடூரம்.. கல்லூரி மாணவர் சரமாரியாக அடித்தே கொலை.!

ஆடலும், பாடலும் தகராறில் காத்திருந்து கதைமுடித்த கொடூரம்.. கல்லூரி மாணவர் சரமாரியாக அடித்தே கொலை.!


College student murder by boys

சிவராத்திரி அன்று நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் காத்திருந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி, கம்பாளிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரத்தினம். இவரது மகன் வாசுதேவன் (வயது 19). இவர் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

அங்குள்ள சென்னகரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும், வாசுதேவனுக்கும் கடந்த மகா சிவராத்திரி அன்று நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக இரு தரப்பினரும் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை கல்லூரிக்கு சென்று, பின்னர் மதியம் தனது நண்பர் பாலகண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் வாசுதேவன் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். 

tamilnadu

அப்போது தும்பைபட்டி நான்கு வழிச்சாலையில் இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல், பாலகண்ணனை சரமாரியாக தாக்கி இருக்கிறது. வாசுதேவனை கொலை செய்யும் நோக்கத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த வாசுதேவன், அவசரஊர்தி மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.