கல்லூரி மாணவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்.!

கல்லூரி மாணவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்.!


college murdered

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் சென்னை பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்த அவர் நேற்று ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் வரும் வழியில்  5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறிது நிறுத்தியுள்ளனர்.

அந்த மர்ம நபர்கள் திடீரென அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் அபிஷேக்கை தாக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அபிஷேக்கை சுற்றிவளைத்து அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி அபிஷேக்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

Murder

இதனையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.