வகுப்பறைக்குள் சக மாணவ மாணவிகள் முன்னிலையிலும் மாணவர் செய்த செயல்!!என்ஜினீயரிங் மாணவி எடுத்த விபரீத முடிவு!!college-girl-suicide

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு திருவரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மாலாஸ்ரீ என்பவர் பொறியியல்  4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் மண்டையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

புதுக்கோட்டையை சேர்ந்த முகமது இம்ரான் என்ற இளைஞனும் மாலாஸ்ரீயோடு அதே வகுப்பில் படித்து வருகிறார்.  கடந்த 25-ந்தேதி கல்லூரி வகுப்பறையில், ஓய்வு நேரத்தில் தலைவலிப்பதாக கூறிய மாலாஸ்ரீ, முகமது இம்ரான் பேக் இருந்த மேஜை மீது தலை வைத்து படுத்திருந்தார்.

இதனைப்பார்த்த முகமது இம்ரான் ஆத்திரத்தில் மாலாஸ்ரீயை திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற மாணவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

college girl

இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாலாஸ்ரீ விடுதிக்கு சென்று விஷம் அருந்தியுள்ளார். உயிருக்கு போராடிய அவரை மற்ற மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாலாஸ்ரீ இறந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் மாணவன் முகமது இம்ரான் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.