நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கோவையில் பரபரப்பு.!! கல்லூரி மாணவி மீது பலாத்க்கார முயற்சி.!! நிர்வாக அதிகாரி தலைமறைவு.!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கல்லூரியில் படித்துக் கொண்டே வேலை
கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி தனது குடும்ப சூழல் காரணமாக படிக்கும் கல்லூரியிலேயே பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்தக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
மாணவியின் மீது பலாத்கார முயற்சி
மேலும் மாணவிக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்த கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்னா, சம்பவம் நடந்த தினத்தன்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து தப்பித்த மாணவி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "நீங்க வந்தா மட்டும் போதும் திமுக கதைய முடிச்சிடலாம்..." நாதக சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு.!!
தப்பியோடிய அதிகாரி
மாணவியின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தன்னை காவல்துறை தேடுவதை அறிந்த அந்த நபர் தலைமறைவாகி இருக்கிறார். அவரை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "மச்சானுடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.." 4 பவுன் தங்க சங்கிலி அபேஸ்.!! பலே மருமகளை தட்டி தூக்கிய போலீஸ்.!!