"நீங்க வந்தா மட்டும் போதும் திமுக கதைய முடிச்சிடலாம்..." நாதக சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு.!!



we-welcome-seeman-to-bjp-alliance-nainar-nagendran-inte

2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நயினார் நாகேந்திரன், திமுக அரசை வீழ்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பாஜக புதிய தலைவர்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை பதவி வகித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

tamilnadu

தொலைக்காட்சி பேட்டி

இந்நிலையில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், மாற்று கொள்கையுடைய கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு தமிழக பாஜக தயாராக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். அதிமுக தவிர மற்ற கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடைய கட்சிகளை பாஜக வரவேற்கிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: "மச்சானுடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.." 4 பவுன் தங்க சங்கிலி அபேஸ்.!! பலே மருமகளை தட்டி தூக்கிய போலீஸ்.!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு

மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சியையும் நாங்கள் கூட்டணிக்கு அழைக்கிறோம். அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். அவரையும் பாஜக கூட்டணி வரவேற்கிறது என தெரிவித்திருக்கிறார். சமீப காலமாகவே சீமான் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நேரடியாக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "உனக்காகதானே வீடு கட்டினேன்..." திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்.!! காதலிக்கு அருவா வெட்டு.!!