BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கோவை: மூட்டுவலி சிகிச்சைக்கு சென்ற இளைஞரிடம் சல்லாப உறவு முயற்சி..மசாஜ் செண்டரில் பலான தொழில்.. பெண்கள் மீட்பு.!
மருத்துவ சிகிச்சைக்காக சென்ற இளைஞரை பாலியல் உறவுக்கு அழைத்த பெண்கள், விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் மீட்கப்பட்டனர். அவர்களை தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் விவேக் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய விவேக், கால் வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடத்திலும் அதற்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
கால் வலி சரியாக, அவரின் நண்பர் ஒருவர், பிந்து என்ற பெண்ணின் அம்பாறை கொடுத்துள்ளார். அவரிடம் ஆயுர்வேத மசாஜ் செய்து பார்க்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை: பெற்றோர் பேச்சை கேட்காததால் விபரீதம்.. 17 வயது நண்பர்கள் சாலை விபத்தில் பலி..!
மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்
பிந்துவை விவேக் தொடர்புகொண்டபோது, அவர் நான் வெளியூரில் இருக்கிறேன். கிணத்துக்கடவு, பொன்மலை நகர் பகுதியில் இருக்கும் மசாஜ் சென்டருக்கு நேரில் சென்று பாருங்கள் என கூறியுள்ளார்.

இதன்பேரில் கிணத்துக்கடவு பகுதிக்கு சென்ற விவேக்கிடம், பெண்கள் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளனர். சுதாரித்துக்கொண்ட விவேக், ஏடிஎம் மையத்திற்குச் சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற சென்றவரை படுக்கைக்கு அழைத்த பெண்கள்
பின் கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் விசாரணை நடத்தியதில் விபச்சார தொழில் நடைபெற்றது தெரியவந்தது.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், மசாஜ் சென்டர் நடத்துவதாக, வீட்டினை வாடகைக்கு எடுத்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், பிந்துவை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: TNPL கிரிக்கெட்டர் மீது மனைவி பரபரப்பு புகார்.. வரதட்சணை கொடுமை, தனிமை காட்சிகள் வீடியோ எடுத்து மிரட்டல்., அதிர்ச்சி தகவல் அம்பலம்.!