தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் மத்திய பிரதேசத்தில் குற்றவாளியை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை... பதைபதைப்பு 10 நிமிடங்கள்.! 



Coimbatore Gold Robbery Case TN Police Arrest Accuse in Madhya Pradesh

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நகை பட்டறையில் தயார் செய்யப்படும் நகைகள் பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த அக். மாதம் கோவையில் இருந்து ஐதராபாத் நகரில் உள்ள கடைக்கு நகைகள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, ரூ.3 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கமானது திருடுபோயின. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்தது. சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி கேமிராக்கள் ஆய்வு சிஏய்ப்பட்டன. அப்போது, நகை ஏற்றிச்சென்ற வாகனத்தை கார் பின்தொடர்ந்து சென்றது உறுதியானது. அந்த காரின் நம்பர் பிளேட்டை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், நகைகளை கொள்ளையடித்து சென்றது முஸ்தாக் என்பதும், அவர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கஞ்சர்சேர்வா பகுதியில் பதுங்கியிருப்பதும் அம்பலமானது. இதனையடுத்து, கோயம்புத்தூர் மாநகர காவல் துறையினர் சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படையானது மத்திய பிரதேசத்திற்கு சென்றது. 

Coimbatore

அங்கிருந்து குற்றவாளி இருக்கும் இடத்திற்கு செல்ல உள்ளூர் நபர்கள் கார் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், உள்ளூர் காவல் துறையினர் உதவியோடு தமிழ்நாடு காவல் துறையினர் கஞ்சர்சேர்வா கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு முஸ்தாக்கை கைது செய்ய முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் காவல் துறையினரை தாக்கி இருக்கின்றனர். 

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் 10 நிமிடத்தில் குற்றவாளியை கைது செய்த அதிகாரிகள், உள்ளூர் காவல் துறையினர் உதவியுடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி 6.5 கிலோ தங்கத்தையும் மீட்டுள்ளனர். தங்கம் உரிமையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சந்தித்த இடர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.