திமுக பிரமுகரின் கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு.. கோவையில் பரபரப்பு.! 

திமுக பிரமுகரின் கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு.. கோவையில் பரபரப்பு.! 


Coimbatore DMK Supporter Car Accident Physically Challenged Aged Man Died

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முதியவர் நடராஜன் (வயது 60). இவர் தன்னால் செய்ய முடிந்த வேலையை செய்து பிழைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று முதியவர் நடராஜன் சிவானந்தா காலனி கண்ணப்பன் நகர் இரயில்வே பாலத்தின் கீழே செல்கையில், அவ்வழியாக வந்த திமுக பிரமுகரின் சொகுசு கார் மாற்றுத்திறனாளி முதியவர் மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில், தலையில் படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட, தகவல் அறிந்து வந்த உறவினர்கள் திமுக பிரமுகரின் கார் ஓட்டுனரை பிடித்து அடித்து நொறுக்கினர். மேலும், காரையும் ஆத்திரத்தில் சேதப்படுத்த முயற்சித்தனர். 

அங்கிருந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் லேசான பதற்ற சூழல் நிலவுவதால், காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.