வீடு வாடகைக்கு வேண்டும் என 2 பெண்கள் வாரங்களோ?; மக்களே உஷார்.. திருட்டு பெண்கள் கைது.. திறந்து வீடு டார்கெட்...!

வீடு வாடகைக்கு வேண்டும் என 2 பெண்கள் வாரங்களோ?; மக்களே உஷார்.. திருட்டு பெண்கள் கைது.. திறந்து வீடு டார்கெட்...!


Coimbatore 2 Women Arrested Robbery Case

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மசக்காளிபாளையம்,  செங்குட்டை வீதியில் வசித்து வருபவர் சதாசிவம் (வயது 60). இவர் பால் வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை மறந்து அப்படியே வைத்து சென்றுள்ளார். 

இதனை நோட்டமிட்ட மர்ம நபர், வீட்டிற்குள் சென்று 15 சவர தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இந்த விஷயம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சதாசிவம் புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, சதாசிவத்தின் வீட்டில் இருந்து பெண்மணி ஒருவர் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. பெண்மணி குறித்து விசாரிக்கையில், அவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தர்மராஜின் மனைவி ரமணி (வயது 33) என்பது உறுதியானது. 

அவரை அதிகாரிகள் கைது செய்து நடத்திய விசாரணையில், கூட்டாளி வினையா (வயது 33) என்ற பெண்மணியுடன் சேர்ந்து திருட்டு செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி வாக்குமூலம் கிடைத்தது.

tamilnadu

ரமணி அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் இறந்துவிட்டதால், அவர்களை நான் கவனித்து வருகிறேன். முதலில் குழந்தைகளை காப்பாற்ற, சாப்பாடு வாங்கி கொடுக்க என சிறுசிறு திருட்டு செயலில் ஈடுபட்டேன். ஒருசமயம் திருட்டு வழக்கில் சிக்கி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். 

அப்போது, போக்ஸோ வழக்கில் சிறைக்கு வந்த வினையாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவருக்கு உதவி செய்து ஜாமினில் எடுத்து, இருவரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோம். வாடகைக்கு வீடு கேட்க செல்வதை போலவும், உறவினர் வீட்டை தேடி வருவதை போலவும் நடித்து நோட்டமிடுவோம். 

அப்பகுதியில் திறந்திருக்கும் வீடுகளை கவனித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோம். யாருக்கேனும் சந்னதகம் இருக்கும் பட்சத்தில் அல்லது கொள்ளை சம்பவத்தின்போதே யாரேனும் வந்துவிட்டால் அதற்கேற்ப நாடகமாடி தப்பி செல்வோம். 2 பெண்களாக வந்து செல்வதால், எங்களின் மீது மக்களுக்கும் சந்தேகம் இல்லை. 

சம்பவத்தன்று மசக்காளிபாளையம் பகுதியில் நோட்டமிட்டபோது, வீட்டின் பூட்டிலேயே சாவி இருப்பதை கண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோம். இறுதியில் அதிகாரிகள் எங்களை பிடித்துவிட்டனர்" என தெரிவித்துள்ளார். ராமையின் மீது கரூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி உட்பட பல மாவட்டத்தில் 15 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

இவர் தான் கொள்ளையடிக்கும் நகையை சித்தியான ஜெயந்தியிடம் கொடுத்து பணமாக பெற்று சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இதனால் ஜெயந்தியையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர். ரமணி மற்றும் வினையா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.