விலைக்கு வரும் காபி டே நிறுவனம்! விலை எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

சில வாரங்களுக்கு முன்பு பிரபல காபி டே நிறுவனத்தின் தலைவர் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வரின் மருகன் சித்தார்த்தா தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. சித்தார்தாவின் தற்கொலையை அடுத்து SV ரங்கநாத் என்பவர் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரபல தனியார் பங்கு நிறுவனம் ஓன்று காபி டே நிறுவனத்தை வாங்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. TPG கேபிட்டல்ஸ் என்னும் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள காபி டேக்கு சொந்தமான பங்குகளை வாங்க உள்ளது.
TPG கேபிட்டல்ஸ் நிறுவனம் காபிடே நிறுவனத்தை சுமார் 4000 கோடிக்கு விலை பேசி வருவதாகவும் விரைவில் இந்த நிறுவனம் காபி டே நிறுவனத்தை கையகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.