"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் சட்டத்தில் கைது.!
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டிருந்த தடகளபயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னையில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தனியார் விளையாட்டு அகாடமி பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீது தடகள சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் நாகராஜன் பேசிய வாட்ஸ் அப் ஆடியோக்கள் இணையத்தில் வெளியானது. பயிற்சி வீராங்கனைகளுடன் அவர் பேசிய ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். பாலியல் வழக்கில் கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மீதும் ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.