கூட்டுறவு வங்கி செயலாளர் தற்கொலை... உறவினர்கள் சாலை மறியல்.! காரணம் என்ன.?

கூட்டுறவு வங்கி செயலாளர் தற்கொலை... உறவினர்கள் சாலை மறியல்.! காரணம் என்ன.?



co-operative-bank-secretary-committed-suicide-relatives

பெரம்பலூர் மாவட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கூடுதல் செயலாளர் பணியில் இருந்த போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆடிட்டரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமந்தாரை பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. 54 வயதான இவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த போது இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை செய்தபோது இரண்டு கடிதங்கள் கிடைத்தன.

tamilnaduஅதில் ஒரு கடிதத்தை தனது மனைவிக்கு எழுதியிருந்த அவர் மனைவியை விட்டு பிரிந்து செல்வதாகவும் எந்த காரணம் கொண்டும் நிலத்தை விற்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். மேலும் வேறொருவர் செலுத்த வேண்டிய பணத்திற்கு தன்னை பணம் செலுத்த வைத்து ஆடிட்டர் அழுத்தம் கொடுத்ததாகவும் தனது தற்கொலைக்கு ஆடிட்டர் தான் காரணம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கணபதியின் தற்கொலைக்கு காரணமான ஆடிட்டரை கைது செய்யக்கோரி சாலை மறியலிலும் அவரது உறவினர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.