தமிழகம்

பிணமாக கிடந்த இரண்டு குழந்தைகள்.! தூக்கில் தொங்கிய தாய்.! தப்பியோடிய கணவன்.!வீட்டுக்கு வந்த மாமனாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

கடலூர் மாவட்டத்தில் 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை அடுத்த வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணமாகி, இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுதாவின் மாமனார் அய்யப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவரது பேர குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்தனர். மேலும் மருமகள் சுதா தனது சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூவரின் சடலத்தையும் கைப்பற்றினார்கள். சுதாவின் கணவர் அய்யப்பன் வீட்டை விட்டு ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் சுதாவின் தந்தை காவல்துறையில் அளித்த புகாரில், தனது பேரக் குழந்தைகள் மற்றும் மகள் உடலில் காயங்கள் உள்ளது. அவர்கள் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. 

தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதகவும், கடந்த வாரம் அவர் வீட்டுக்கு வந்து 3 பவுன் நகையை வாங்கிச் சென்ற நிலையில், கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு குழந்தையுடன் சுதா உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement