தமிழகம்

கணவனின் செல்போனை பார்த்த மனைவிக்கு பேரதிர்ச்சி.. சொந்த தங்கை முதல்., பகீர் வீடியோ..!

Summary:

கணவனின் செல்போனை பார்த்த மனைவிக்கு பேரதிர்ச்சி.. சொந்த தங்கை முதல்., பகீர் வீடியோ..!

மனைவியின் சகோதரி உட்பட பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன் குறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த பெண்மணி, தனது கணவரின் அலைபேசியை எதற்ச்சையாக பார்த்துள்ளார். அப்போது, தனது தங்கை உடைமாற்றும் வீடியோ இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அப்பகுதியை சேர்ந்த பல பெண்களின் வீடியோவும் ஆபாசமாக பதிவு செய்யப்பட்டவாறு இருந்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, கணவர் மீது திருவெற்றியூர் W14 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணின் கணவரான சேகரை (வயது 30) கைது செய்து விசாரணை செய்தனர். 

அப்போது, மனைவியின் தங்கையான 26 வயது பெண் உடைமாற்றும் வீடியோவை திருட்டுத்தனமாக எடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைப்போல, பிற பெண்களின் வீடியோவையும் நானே பதிவு செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, சேகரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சேகரை சிறையில் அடைத்தனர். 


Advertisement