துக்கவீட்டில் போதையில் ரகளை., சண்டை., கும்மாங்குத்து..! 8 பேர் கைது.!Chennai Thiruvotriyur Death Funeral Ceremony Gang Fight 8 Arrested

சென்னையில் உள்ள திருவெற்றியூர், பகைத்தொட்டி குப்பம் பகுதியில் வசித்து வருபவர் செல்வமுருகன் (வயது 41). இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில், உறவினர்கள் அஞ்சலிக்காக வீட்டின் முன்புறம் குளிர்பதனப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

அப்போது, துக்க வீட்டிற்கு வந்த இருதரப்பு மதுபோதையில் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில், அது கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் செல்வமுருகனின் உடல் வைக்கப்பட்ட குளிர்பதன பெட்டியுடன் உடல் கீழே விழுந்துவிட, உறவினர்கள் கதறியழுதனர். 

chennai

மேலும், இருதரப்பு மோதலில் சிலருக்கு காயம் ஏற்படவே, மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணூர் விரைவு சாலையில் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவெற்றியூர் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவே, இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் இருதரப்பையும் சேர்ந்த விஜய் (வயது 27), ராம்குமார் (வயது 26), சதீஷ் (வயது 21), சுதாகர் (வயது 28), நவீன் (வயது 22), குமரேசன் (வயது 22) உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.