தமிழகம்

மழை விட்டு 20 நாட்கள் ஆச்சு.. வெள்ளம் இன்னும் வடியல.. இடுப்பளவு தண்ணீரில் மக்கள்.!

Summary:

மழை விட்டு 20 நாட்கள் ஆச்சு.. வெள்ளம் இன்னும் வடியல.. இடுப்பளவு தண்ணீரில் மக்கள்.!

மழை பெய்துமுடித்து பல நாட்கள் ஆகியும் இடுப்பளவு தண்ணீர் பெரியார் நகர் பகுதியில் அப்படியே சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தலைநகர் சென்னையில் மழை காலம் என்றால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கிவிடுகிறது. மழையினால் ஏற்படும் நீர் சாலைகளில் தேங்கி, மேற்படி செல்ல இயலாமல் அப்படியே வெள்ளம் போல காட்சிகள் வருடம்தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் நகரின் ஒவ்வொரு பகுதியும் கடுமையான அளவு பாதிக்கப்படுகிறது. 

கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக பெய்த தொடர் மழையினால் சாலைகளில் தேங்கிய நீர், அவசர கதியில் மின்மோட்டார் உபயோகத்துடன் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், திருநின்றவூர் பகுதியில் உள்ள பெரியார் நகரில் மழை பெய்து முடித்து 20 நாட்கள் கடந்தும், மழை நீர் வெள்ளம் தொடர்ந்து வடியாமல் இருக்கிறது. 

இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள், இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரியார் நகர் பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருபவர்கள், பள்ளி - கல்லூரிகளுக்கு சென்று வருபவர்கள், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுபவர்கள் என பலரும் அவ்வழியாக இயக்கப்படும் சிறு படகு வகைகளையும், தற்காலிகமாக தயார் செய்யப்பட்ட மர மிதவைகளையும் உபயோகித்து பயணித்து வருகின்றனர். 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.


Advertisement