4 நாட்கள் டீலில் விட்ட காதலி.. கயிற்றை எடுத்த காதலனின் விபரீத முடிவால் சோகம்.!
4 நாட்கள் டீலில் விட்ட காதலி.. கயிற்றை எடுத்த காதலனின் விபரீத முடிவால் சோகம்.!

கருத்து வேறுபாடு காரணமாக காதலி பேச மறுப்பு தெரிவிக்க, மனவேதனையடைந்த காதலர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள திருநின்றவூர் பெரியார் நகர், திருவள்ளூர் இரண்டாவது தெருவை சார்ந்தவர் செந்தில் குமார் (வயது 24). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த இளம்பெண்ணும் - செந்தில்குமாரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரத்திற்கு முன்னர் செந்தில் குமாருக்கும் - இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக செந்தில் குமாரிடம் பெண்மணி பேசாமல் இருந்துள்ளார். நேற்று செந்தில் குமாரின் பெற்றோர் திருவள்ளூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிடவே, செந்தில் குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் செந்தில்குமார் அறையில் இருந்து வெளியே வராத நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் திருநின்றவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், செந்தில்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
செந்தில்குமாரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.