திருமணம் முடிந்தும் ஒரே பெண்ணுக்கு அடித்துக்கொண்ட 2 பேர்.. கணவனை கொலை செய்ய முயன்ற பயங்கரம்.!

திருமணம் முடிந்தும் ஒரே பெண்ணுக்கு அடித்துக்கொண்ட 2 பேர்.. கணவனை கொலை செய்ய முயன்ற பயங்கரம்.!


Chennai Tambaram Man Murder Attempt due to Unconditional Love

சென்னையில் உள்ள தாம்பரம், கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் கோகுல் (வயது 27). இவரின் மனைவி யாஷ்மின் (வயது 24). இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவில் மர்ம நபர்கள் கோகுலின் வீட்டு முன்பு அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாம்பரம் காவல் துறையினர், கோகுலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

விசாரணையில், யாஸ்மின் கல்லூரியில் படித்துவந்தபோது கோகுல் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேர் யாஸ்மினை காதலித்து வந்துள்ளனர். விஜயகுமார் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற நிலையில், யாஸ்மினை கோகுல் கரம்பிடித்துள்ளார். இதனால் விஜயகுமார் மற்றும் கோகுல் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 

chennai

இந்த சூழலில் யாஷ்மினிடம் மீண்டும் பேசத்தொடங்கிய விஜயகுமாரின் போக்கு சரியில்லை. இது முன்விரோத கோபத்தை அதிகப்படுத்தவே, விஜயகுமார் தனது நண்பர்களுடன் கோகுலை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்பது உறுதியானது. 

இதனையடுத்து, விஜயகுமார் மற்றும் அவனது நண்பர்கள் அருள்ராஜ், பார்த்திபன், ஜெய்கிருஷ்ணன் ஆகியோரின் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.