தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சென்னையில் நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு, தடுப்பூசி பணிகள் தீவிரம்..!
சென்னையில் உள்ள இராயபுரம் பகுதியில், கடந்த வாரத்தின்போது தெருநாய் 28 பேரை துரத்திகடித்தது. பெண்கள், சிறுவர்கள் என பலரும் பாதிக்கப்படவே, ஆத்திரமடைந்த மக்கள் நாயை அடித்துக்கொன்றனர்.
கால்நடை மருத்துவர்களின் பரிசோதனையில் நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஒருலட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இனக்கட்டுப்பாடு செய்யவும் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாய்கடியால் பாதிக்கப்பட்டோரின் விபரமும் சேகரிக்கப்பட்டு, அவர்களின் வீட்டிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.