பாயசம் கொடுத்து மூதாட்டியின் நகையை கொள்ளையடித்த சோகம்.. பக்கா ஸ்கெட்ச்..!

பாயசம் கொடுத்து மூதாட்டியின் நகையை கொள்ளையடித்த சோகம்.. பக்கா ஸ்கெட்ச்..!


Chennai Royapuram Aged Person Jewel Robbery by Neighborhood

சென்னையில் உள்ள ராயபுரம் பீ.வி கோவில் பகுதியை சார்ந்தவர் கனகவல்லி (வயது 85). இவர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த 7 ஆம் தேதி கனகவல்லி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மேலும், அவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகள் கொள்ளைபோய் இருந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ராயபுரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டியின் வீட்டிற்கு அருகே உள்ள 40 கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். 

chennai

அப்போது, இதே பகுதியில் வசித்து வரும் பத்மாவதி (வயது 53) என்ற பெண்மணி, மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த பாயசத்தை கொடுத்து நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. பத்மாவதியை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், கடந்த 7 ஆம் தேதி மூதாட்டி கனகவல்லியின் வீட்டிற்கு சென்ற பத்மாவதி, தனக்கு திருமண நாள் என்று கூறி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, மயக்க மருந்து கலந்த பாயசத்தை பாசத்தின் கொடுத்து கொள்ளையடித்து இருக்கிறார்.