அடுத்த 5 நாட்களில் எங்கெங்கு மழை பெய்யும்? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களில் எங்கெங்கு மழை பெய்யும்? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!


chennai-rmc-announce-rain-for-next-5-days

தமிழ்நாட்டில் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களுக்கான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 21 ஆம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

22 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23 ஆம் தேதியை பொறுத்தவரையில் தென்தமிழகம், சேலம், நாமக்கல், கோயமுத்தூர், திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

24 ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். 

25 ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தளவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.