#Breaking: மக்களே உஷார்.. விடியவிடிய மழைக்கான அறிவிப்பை வெளியிட்டது வானிலை ஆய்வு மையம்.. இந்த மாவட்டங்களில் வெளுத்தது வாங்குமாம்.!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் 12 மாவட்டங்களில் நள்ளிரவு சுமார் 1 மணிவரையில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.