28 ஆம் தேதி வரை தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும்?.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

28 ஆம் தேதி வரை தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும்?.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!



Chennai Regional Meteorological Center Announce Rain Till Feb 28 th Date

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, 24 ஆம் தேதியான் இன்று தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

25 ஆம் தேதியான நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். 

26 தேதியை பொருத்தவரையில் தென்தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

27 ஆம் தேதியை பொருத்தவரையில் தென்தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

28 ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் பதிவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.