தமிழகம்

புறா வளர்க்கும் முன் விரோதத்தில், தாய்மாமனை போட்டுத்தள்ளிய மச்சான்.. சென்னையில் பகீர்.!

Summary:

புறா வளர்க்கும் முன் விரோதத்தில், தாய்மாமனை போட்டுத்தள்ளிய மச்சான்.. சென்னையில் பகீர்.!

முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்த இருவரை அபிராமிபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). இவரின் அக்கா மகன் ரஞ்சித் (வயது 20). இவர்கள் இருவரும் உறவினராக இருந்து வரும் நிலையில், புறா வளர்ப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி இரவில் சதீஷின் வீட்டு வாசலில் அவர் இருக்கையில், ரஞ்சித் தனது நண்பருடன் சேர்ந்து சதீஷை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் தப்பி சென்ற நிலையில், சதீஷின் தம்பி E4 அபிராமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு ரஞ்சித் மற்றும் மயிலாப்பூரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.


Advertisement