வெளுத்துவாங்கிய வெயிலால்., தமிழகத்தை குளிரவைக்கப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?.! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வெளுத்துவாங்கிய வெயிலால்., தமிழகத்தை குளிரவைக்கப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?.! வானிலை ஆய்வு மையம் தகவல்..!


chennai-rain-alert-to-6-districts

மேற்கு திசைகாற்றின் மாறுபாடு காரணமாக இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், "மேற்கு திசைகாற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக வட தமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது".

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அத்துடன் அதிகபட்ச வெப்பநிலையானது 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 27-28 டிகிரி செல்சியஸ் செலவில் இருக்கக்கூடும்.

tamilnadu

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, "கர்நாடக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.